சிரியாவின் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஜுப் அல் குபே மாவட்டத்தில் இன்று விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இரு குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அங்குள்ள போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிரியாவை சுமார் 33 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி; பஷர் அல் ஆசாத்தை ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பொதுமக்கள் உள்பட சுமார் மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து உடலுறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர்.
மேலும் சுமார் 50 லட்சம் பேர் வெளிநாடுகளிலும் 70 லட்சம் மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.