குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிளிநொச்சி ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்கள் தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இன்று காலை ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இருந்த போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணம் குறித்த எதிா்ப்பு நடவடிக்கை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.
காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆா்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஆனால் காற்றுடன் கூடிய மழை காரணமாக குறித்த ஆா்பபாட்டத்தை தாங்கள் பிற்போட்டுள்ளதாகவும் விரைவில் பிாிதொரு தினத்தில் எதிா்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அது தொடா்பில் அனைவருக்கும் அறிவிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்
ஆனையிறவு,குறிஞ்சாதீவு உப்பளங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
Nov 30, 2016 @ 16:58
கிளிநொச்சி ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்கள் தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாளை 01-12-2016 காலை ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆா்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.
ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் தனியாரிடம் கையளிக்கப்படுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது எனவும் 1938 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த உப்பளங்கள், 1990 வரை மிகுந்த வினைத்திறனோடு அதிக வருமானத்தை ஈட்டியுள்ளன எனவும் ஆனையிறவு உப்பளத்தின் ஆண்டுக்கான உற்பத்தி 30 ஆயிரம் மெற்றிக்தொன்னாகவும் குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் ஆண்டுக்கான உற்பத்தி 40 ஆயிரம் மெற்றிக் தொன்னாகவும் இருந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச அமைப்புக்கள் ஆனால், 2016 இல் 1100 மெற்றிக் தொன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது எனவும் இவ்விரு உப்பளங்களின் புனரமைப்புக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாமையே இதற்கான காரணமாகும் எனவும் தெரிவித்துள்ளன.
எனவே மேற்படி உப்பளங்களை சுற்றியுள்ள கிராமங்களின் வாழ்வாதாரத்தை வழங்கி வந்த உப்பளங்கள் தனியாா் மயப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனை தொடா்ந்தும் கூட்டுத்தாபனமாக இயங்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுமே இந்த ஆா்ப்பாட்டத்தை மேற்கொள்ளவதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.