160
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கொழும்பில் வீதிகளை மறித்து போராட்டம் நடத்துவோருக்கு தனியான இடமொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. போராட்டங்களை நடத்துவதற்கு தனியான ஓர் இடத்தை ஒதுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்படுவதனை அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் பாராளுமன்றிற்கு செல்லும் பாதையை வழிமறித்து போராட்டம் நடத்துவதனால் உறுப்பினர்கள் அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love