குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டு பொய்யானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்ஸ குற்றம் தெரிவித்துள்ளார். லொஸ் ஏஞ்சல்ஸில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அந்த வீட்டை தமது மகனின் பயன்பாட்டுக்கு வழங்கியதாகவும் இந்த வாடகைத் தொகை வெளிவிவகார அமைச்சினால் செலுத்தப்பட்டதாகவும் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கோதபாய தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் ஊடாக இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தம்மை அவமரியாதை செய்ய மிகவும் இழிவான வழிமுறைகளை மங்கள சமரவீர பின்பற்றி வருவதாகவும் எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.