குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முஹமட் ஹாபீஸ் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் விதிகளின் அடிப்படையில் பந்து வீசவில்லை என ஹாபீஸிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக கடந்த காலங்களில் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சார்பில் ஹாபீஸ் பங்கு பற்றிய போதிலும் பந்து வீசாமல் வெறும் துடுப்பாட்ட வீரராக மட்டும் செயற்பட்டு வந்தார்.
2015ம் ஆண்டில் காலியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஹாபீஸ் முறைகேடாக பந்து வீசுவதாக குற்றம் சுமத்தி முறைப்பாடு செய்பய்பட்டிருந்தது. தற்போது ஹாபீஸ் பந்து வீச்சுப் பாணியை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் , சர்வதேச போட்டிகளில் பந்து வீச முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.