குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் அதன் தலைவர் நிசாங்க சேனாதிபதி, முன்னாள் கடற்படைத் தலைவர்கள் மூன்று பேர் உள்ளிட்டவர்களுக்கும் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த அனைத்துப் பயணத்தடைகளையும் கொழும்பு பிரதான நீதவான் நீக்கியுள்ளார். அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பலுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.