165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஆட்சிக்கு வந்தது முதல் சூழ்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் சுமத்தி வருவதாகவும் மங்கள சமரவீர இழிவான ஓர் அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் கோட்டபாய தெரிவித்துள்ளார்.
Spread the love
1 comment
இலங்கை வரலாற்றின் மிக மோசமான வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எனக் குறிப்பிடும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் திரு. கோத்தபாய ராஜபக்ஸ, தனக்கெதிராகப் போலிக் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்! இவ்வளவு வீம்பு பேசுபவர், தனக்கெதிரான போலிக்(?) குற்றச்சாட்டுக்களை மறுத்து, அவற்றுக்கான ஆதாரங்களை சட்டரீதியாகக் கோரலாமே? அவற்றைப் பொய்யென நிரூபிப்பதனூடாக, வெளிவிவகார அமைச்சருக்கு எதிராகப் புதிதாக ஒரு மானநஷ்ட வழக்கைத் தொடுத்து, நஷ்டஈடாக 28 மில்லியன் என்ன 50 மில்லியனே கோரலாமே?
மகிந்த ஆட்சிக் காலத்தில் ஒரு மிகப் பலம்பொருந்திய அரச அதிகாரியாக இருந்த இவருக்கு, அப்பதவி இவருக்கு கிடைக்க மறைமுகக் காரணியாக இருந்தவரே, இவர் குற்றம் சாட்டும் திரு. மங்கள சமரவீர என்பதை, எப்படி மறந்தார்? 2005 ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் திரு. மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு காரணமானவர்களில் திரு. மங்கள சமரவீர முதன்மையானவரென்பதை மறுக்க முடியுமா?
இவர் கூறுவது போல், தன்னால் வெற்றி கொள்ளப்பட்டதாகப் பீத்திக்கொள்ளும், ‘தமிழீழ விடுதலைக்கான போரை’, கருவறுப்பதில் பெரும்பங்காற்றியவரும், திரு. மங்கள சமரவீரதான்! திருமதி. சந்திரிகா அம்மையார் ஆட்சிக் காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த திரு. மங்கள சமரவீர, உலகின் பல நாடுகளாலும் விடுதலைப் புலிகள் அமைப்புத் தடை செய்யப்படக் காரணமாக இருந்தார் என்பதை மறுக்க முடியுமா?
ஆற்றாமை காரணமாக, மாரித் தவளையை விட மோசமாகக் கத்தினாலும், ‘சட்டத்தின் பிடியில் இருந்து இவர் போன்றோர் தப்பிக்கக் கூடாது’, என்பதே எல்லோரினதும் பிரார்த்தனையாகும்!