நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை என புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து புகையிரத தொழிற்சங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவுசெய்யப்பட்டிருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கமும் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொள்ளப்போவதில்லை என இதன் போது தெரிவித்துள்ளனர்.
புகையிரத திணைக்கள ஊழியர்களின் சில உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் அவர்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.