குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டை மீட்டு எடுக்கும் ஆற்றல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கே உண்டு என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் மேலும் சிக்கல்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தைப் போன்று அல்லாது தற்போது நாடு இருண்ட யுகத்தை நோக்கி நகர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டை மீளவும் ஆட்சி செய்ய விரும்பவில்லை எனவும், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி வழிகாட்டல் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஊடகங்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.