குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்களின் பிரச்சினைகள் அரசாங்கத்திற்கு புரிவதில்லை என ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரமங்களை புரிந்து கொள்ளும் பிரதமரும் அரசாங்கமும் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்து மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளடங்களாக 160,000 ரூபா கிடைக்கும் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போக்குவரத்து, காரியாலய கொடுப்பனவு போன்றன உள்ளடங்களாக மாதாந்தம் 460,000 ரூபா கிடைக்கப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை உயர்த்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.