159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனியார் பேரூந்து பணிப் பகிஸ்கரப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்கள் சிலவற்றினால் நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் தற்காலிக அடிப்படையில் போராட்டத்தை கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதன் காரணமாக தற்காலிக அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் அதிகரி;க்கப்பட்டதனை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love