தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய புயல் ஒன்று உருவாகி வருகிறது எனவும் இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலேசிய தீப கற்ப பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
இது படிப்படியாக வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும் எனத் தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி வரும் 9ம் தேதி ஆந்திராவிற்கும் ஒடிசாவிற்கும் இடையில் கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புயல் தமிழக கடற்கரை நோக்கி வந்தால், பலத்த மழை தமிழகத்தில் பெய்யும் என்றும் வரவில்லை என்றால் வறண்ட வானிலையே அடுத்த 10 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.