157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாரியளவில் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரேஸிலில் இலங்கைக்கான தூதரகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது. பிரேஸிலின் ரியோ டி ஜெனய்ரோவில் தூதரகத்திற்கான சொத்துக் கொள்விற்காக 870 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியினதும், அமைச்சரவையினதும் அனுமதியின்றி இந்த சொத்து கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love