குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி தேர்தலின்போது பல பொருட்களை மஹிந்த ராஜபக்ஸ மக்களுக்கு வழங்கிய போதிலும் தேர்தலில் தோல்வியடைந்தார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தங்காலை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டது, விதை நெல்லுக்காக பணம் வழங்கப்பட்டது, சில ஆடைகள் வழங்கப்பட்டது, ஒவ்வொரு வீட்டுக்கும் ஐந்து கிலோ உருளைக் கிழங்கு வழங்கப்பட்டதுஎன அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மக்களுக்கு பல பொருட்களை இலவசமாக வழங்கிய போதிலும் மஹிந்த ராஜபக்ஸவினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.