குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் கஸ்ட்ரோவின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர். கியூபாவின் சன்தியாகுவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ மற்றும் உலகத் தலைவர்கள் சிலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 25ம் திகதி பிடெல் கஸ்ட்ரோ தனது 90ம் வயதில் காலமானார். பிடெல் கஸ்ட்ரோவின் சோசலிச கொள்கைகள், கோட்பாடுகள் தீர்மானங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் எனவும் அதற்காக அர்ப்பணிபுடன் செயற்படப் போவதாகவும் ராவுல் கஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
மறைந்த தலைவர் பிடெல் கஸ்ட்ரோவின் பெயரில் வீதிகள், பாதைகள் அல்லது வேறும் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மறைந்த தலைவரின் வேண்டுகோளுக்கு அமைய இவ்வாறு அவரது பெயரில் அவரது நினைவாக எதனையும் பெயரிடவோ அல்லது உருவாக்கவோ கியூபாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்களி;ன் பெயர் புகழை மறைந்த தலைவர் பிடெல் விரும்பவில்லை என அவரது சகோதரரும் ஜனாதிபதியுமான ராவுல் தெரிவித்துள்ளார்.
000