184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குருணாகல் பிரதேசத்தில் ஆயுதங்களை வாகனமொன்றில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டிபென்டர் ரக வாகனமொன்றில் இவ்வாறு சில ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கைத்துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 20 வயதான குருணாகல் கலன்கொலவத்த என்னும் இடத்தைச் சேர்ந்தவர் எனவும் சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் குருணாகல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love