குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இணைப்பு2 – செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திஸ்ஸ அத்தநாயக்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
Dec 5, 2016 @ 08:21
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்றைய தினம் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பிணை கோரி திஸ்ஸ அத்தநாயக்க சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட உள்ளது. பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. எனவே, இந்தவிடயம் குறித்து விளக்கம் அளிக்க நீதிமன்றில் ஆஜராகுமாறு சட்ட மா அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.