161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேபாள பிரதமர் Pushpa Kamal Dahal அடுத்த ஆண்டு இலங்கைக்கு வர உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், இலங்கைக்கு வருமாறு நேபாள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் சுவர்ணலதா பெரேரா இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நீண்ட கால நட்பு காணப்படுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் நேபாள பிரதமர் Pushpa Kamal Dahal தெரிவித்துள்ளார்.
Spread the love