குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிவாரணங்களை வழங்குவதற்கு 22 பில்லியின் டொலர் உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. யேமன், ஈராக், சிரியா மற்றும் தென் சூடான் போன்ற நாடுகளில் பாரியளவில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிலும் பல்வேறு அனர்த்தங்களினால் உலகின் பல நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க போதியளவு நிதி வசதி இருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த ஆண்டு சுமார் 22.22 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி வழங்குவதற்காக தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரப் பொறுப்பாளர் Stephen O’Brien இதனைத் தெரிவித்துள்ளார்.