160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய கட்சி உருவாக்கத்துடன் தொடர்பு கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் தமக்கு தொடர்பு கிடையாது என குறிப்பிட்டுள்ளார். புதிய கட்சி 100 பேருக்கான விண்ணப்பங்களையும் உறுப்பினர் இலக்கங்களையும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த இந்த பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தாம் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் காவல்துறை மா அதிபர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
Spread the love