மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரீனாவில் ராணுவ வீரர்களின் 60 குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தோழி சசிகலா மற்றும் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் ஆகியோர் இறுதி சடங்குகளை செய்தனர்.
இன்னும் சற்று நேரத்தில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம்
ராஜாஜி மண்டபத்திலிருந்து இந்திய நேரம் மாலை 4.25 மணியளவில் ராணுவ வாகனத்தில் தங்கப் பேழையில் இராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் தற்கொழுது. மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அடைந்து புரட்சித் தலைவி ஜெயலலிதா என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட சந்தப் பேளையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தியதுடன் ஆளுனர், அமைச்சர்கள் , அதிகாரிகள் தமது இறுதி மரியாதையை செலுத்திக் கொண்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தற்பொழுது தேசிய கொடி எடுக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் இடம்பெறுகின்றன.