குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
செச்னியாவின் அனுபவங்களிலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் Alexander Karchava தெரிவித்துள்ளார். சிறுபான்மை தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். செச்னியா விவகாரத்தில் ரஸ்யாவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் யுத்தத்தின் பின்னர் நல்லிணக்க நிலைமைகள் குறித்து கண்டறிந்து கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றை செச்னியாவிற்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களில் ரஸ்யா தலையீடு செய்யாது என குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து முரண்பாடுகளும் அமைதியான வழிகளில் தீர்க்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.