குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த விஹாரையில் ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு எலன் மெதினியாராமயவின் விஹாராதிபதி உடுவே தம்மாலோக்க தேரருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிபந்தனை அடிப்படையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 6 மணி வரையில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட விஹாரiயை அண்டி பகுதிகளில் குடியிருக்கும் ஆறு அயலவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் ஒலி பெருக்கியினால் அதிகளவு ஒலி எழுப்பப்படுவதனால் பெரும் அசௌகரியங்களும் மன உளைச்சலும் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகளில் எதிர்வரும் 16ம் திகதி ஆஜராகுமாறு உடுவே தம்மாலோக்க தேரருக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.