குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்ச்சைக்குரிய சட்டமொன்றுக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பலஸ்தீனப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட இஸ்ரேல் குடியிருப்புக்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது.
மேற்குக் கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் குடியிருப்புக்களை சட்ட ரீதியானதாக்கும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்த சட்டத்திற்கு ஏற்கனவே சர்வதேச ரீதியில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இஸ்ரேலின் இந்த உத்தேச சட்டம் காணிகளை அபகரிக்கும் வகையிலானது எனவும் இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை மேலும் வலுக்கச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த சட்டம் இன்னமும் முழுமையான அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.