167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சவூதி அரேபியாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்காக உளவுப் பணியில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு 15 பேருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஷியா முஸ்லிம்களே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிய புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நாட்டுக்கு எதிராக துரோகச் செயலில் ஈடுபட்டதாகவும், உளவு பார்த்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இராணுவ வலயங்கள் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த நபர்கள் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love