இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூமார் 600 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட மினசாரத்; துண்டிப்பு மற்றும் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மீட்பு பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 18 பேர் உயிரிழப்பு
Dec 7, 2016 @ 09:42
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியில் இன்று அதிகாலை தாக்கிய நிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலைவேளை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்த வேளை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் தங்களது வீடுகளைவிட்டுவீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அடுத்தடுத்து, ஐந்துமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் வீடுகள் மட்டுமின்றி, கடைகள், மசூதிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மண்மேடாகிப் உள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள பலரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது