157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
1443 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. உள்விவகார அமைச்சு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சும் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களமும் கூட்டாக இணைந்து இந்த இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
பத்தரமுல்ல சுஹூருபாயவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் எஸ்.பி நாவீன்ன பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love