159
பாகிஸ்தானில் 46 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விழுந்து நொருங்கியுள்ளது. இன்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பயணித்த பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், PK661 என்ற பயணிகள் விமானமே இடையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
இந்தநிலையில், விமானம் விழுந்து நொருங்கியுள்ளதாகவும் அதில் பயணித்த அனைவரும் இறந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பிரபல பாடகரான யுனைட் ஜமாஷ் என்பவரும் குறித்த விமானத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love