குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐந்து வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் கிளைகள் இலங்கையில் திறக்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இந்தியாவின் மனிபால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்களின் கிளைகள் இலங்கையில் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆண்டு தோறும் சுமார் 100,000 மாணவ மாணவியர் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில தகுதி பெற்றுக் கொள்ளும் போதிலும், 25 வீதமானவர்களே பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் துறையினர் கல்வியில் முதலீடு செய்வதனால் கூடுதலான அளவு மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.