பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8ம் திகதி அறிவித்தமைக்கு எதிராக மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த ரூ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திலும் கடும் போராட்டங்களில் ஈடுபடுவதனால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல் முடங்கி வருகிறது.
இந்நிலையில், ரூபாய் தாள் ரத்து நடவடிக்கைக்கு எதிராக மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளியேறியுள்ள போதும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அப்துல் மன்னன் தெரிவிக்கையில் தங்களால் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க முடியாது எனவும் ரூபாய் ரத்து நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்ற முடிவு மேலும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.