தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ள நிலையில் இந்த புயலுக்கு ‘வார்தா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் 1090 கி.மீ தொலைவிலும் மசூலிப்பட்டினத்திற்கு கிழக்கே தென்கிழக்கில் 1070 கி.மி. தொலைவிலும் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அந்த மான் நிக்கோபர் தீவுகளின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை அண்மித்துள்ள கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.