176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை குறித்த உணவகத்திற்கு அருகில் இருந்த ஓய்வறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 38 வயதான உணவக ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துறைமுக தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Spread the love