ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினரும் ஈராக்கிய விமானப் படையினரும் ஐ.எஸ் அமைப்பினரின் கைவசமுள்ள நகர் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலின் போது குண்டுகள் பொதுமக்களின் பகுதியில் விழுந்தமையால் பெண்கள் குழந்தைகள் உட்பட 63 உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் மேற்கு பகுதியில் சிரியா எல்லையை அண்மித்துள்ள காயிம் நகரில் உள்ள மசூதி ஒன்றில் ஐ.எஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக தெரிவித்து மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அருகிலுள்ள மக்கள் அதிகமாக நடமாடிய சந்தைப் பகுதியில் விழுந்ததாலேயே இவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.