குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த பிக்கு ஒருவர் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்படவில்லை எனவும் அரசாங்கத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்திய பௌத்த பிக்குவிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டது என அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மதத்திற்கு இழிவு ஏற்படும் வகையில் பொதுபல சேனா இயக்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.