குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய இலங்கைக்குள் உச்ச அளவில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்றைய தினம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் உச்ச அளவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதன் மூலம் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதமளவில் புதிய அரசியல் சாசனம் தொடர்பான உத்தேச வரைவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பௌத்த மதத்திற்கான முன்னுரிமை உள்ளிட்ட சில விடயங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை ,பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.