குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் முன்னாள் வரவு செலவுத் திட்ட அமைச்சர் Jerome Cahuzac க்கு எதிராகவே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் பதவியை ராஜினாமா செய்திருந்த 63 வயதான Jerome Cahuzac வரி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சருக்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரின் மனைவிக்கும் வரி மோசடி தொடர்பில் இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்புச் செய்தாக முன்னாள் அமைச்சர் Jerome Cahuzac நீதிமன்றில் ஒப்புக் கொண்டிருந்தார்.