பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறிய தீவுக்கூட்டமான சாலமன் தீவுகளில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.0 என பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
சாலமன் தீவின் கிராகிரா பகுதியில் கடலுக்கு அடியில் தென்மேற்கே 70 கி.மீ தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலமன் தீவுக்கு அருகில் உள்ள பாபுவா நியூ கினியா பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்தில் சுனாமி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.