184
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் , டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதனால் ஏரளாமான புகையிரதங்கள் விமானங்கள் தாமதமாவதுடன் ரத்தும் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love