குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி பகுதியை குத்தகைக்கு எடுத்தவரின் வியாபார நடவடிக்கையால் தாங்கள் பெரிதும் பாதிப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு கீழ் வருகின்ற பொதுச் சந்தையில் மரக்கறி பகுதியை குத்தகைக்கு பெற்ற தனிநபா் ஒருவா் வரி அறவிடும் பகுதியில் வைத்து காலை முதல் மாலை வரை மொத்த மற்றும் சில்லரை வியாபாரத்தில் ஈடுப்படுவதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் கூறுகின்றனா்.
குறித்த நபா் ஒரு மொத்த வியாபாரி என்பதனால் சந்தை மரக்கறி வியாபாரிகளுக்கும் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வருகின்றாா். அதேவேளை சந்தைக்கு மரக்கறிக்ளை கொள்வனவு செய்ய வருகின்ற மாவட்டத்தின் வெளி வியாபாரிகளுக்கும் அவரே மரக்கறிகள மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கின்றாா். இதனால் தங்களிடம் பலா் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வருவதில்லை எனவும் சந்தை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
எனவே இது தொடா்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் கணேசன் கம்சநாதனை தொடா்பு கொண்டு கேட்ட போது
சந்தையை குத்தகை்கு எடுத்தவா் அங்கு குத்தகை பணம் மற்றும் வரி அறவீடுகளை மேற்கொள்ளவதற்கே அனுமதியும் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவா் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாது. இது தொடா்பில் வியாபாரிகளாலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபையும் இந்த விடயம் தொடா்பில் ஆதராங்களை தேடிக்கொண்டிருக்கிறது. எனவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்படும் போது அவரது நடவடிக்கை உடனடியாக தடை செய்யப்படுவதோடு, ஒப்பந்தமும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.