140
சிரியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோரி ஐ.நா நடத்திய வாக்கெடுப்பில் பெரும்பாலான நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. தீர்மானத்திற்கு ஆதரவாக 122 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில் ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்துள்ள அதேவேளை லெபனான், ஈராக், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.
ஜனாதிபதி ஆசாத் மற்றும் ரஷ்ய ஆதரவு படைகள் சிரியாவில் படுகொலைகளை செய்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த தீர்மானம் கனடாவினால் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love