2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 110 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் பாராளுமன்றில் நடைபெற்றது.
இதன் போது வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், எதிராக 55 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை, ஜே.வி.பி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
கடந்த நவம்பர் மாதம் 10ம் திகதி வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்திருந்தார்.
இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.