ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்று வரும் போராட்டத்தை தாம் திட்டமிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையின் ஆட்சி இருந்திருந்தால் ஹம்பாந்தோட்டை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியிருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் இருந்த போதிலும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் முன்னாள் தலைவர் என்ற ரீதியில் இந்தப் பிரச்சினையில் தாம் தலையீடு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.