214
தமிழ் மக்களது இதயபூமியான மணலாற்றினில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கல்,குடியேற்றங்கள்,மற்று ம் பௌத்த மயமாக்கல் தொடர்பினில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட இருளுள் இதயபூமி எனும் ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.
யாழ்.றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் நாளை (12) மாலை 3.30 மணியளவில் வெளியீடு செய்யப்படவுள்ளது. அதனை தொடர்ந்து ஆவண படத்தினை உத்தியோகபூர்வமாக அரசியல் தலைவர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
வடமாகாண முதலமைச்சர்,அமைச்சர்கள்,நாடாளு மன்ற உறுப்பினர்கள்,சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் என பலரிடம் குறித்த ஆவண படம் கையளிக்கப்பட உள்ளது.
Spread the love