குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நீர்கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டமொன்றில் பாரியளவில் பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரத் குமாரவை கைது செய்யுமாறு அண்மையில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று காலை கைதுசெய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளார்.
இணைப்பு2 – பிரதி அமைச்சர் சரத் குமார தலைமறைவு
Dec 17, 2016 @ 06:24
பிரதி அமைச்சர் சரத் குமார தலைமறைவாகியுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் சரத்குமார மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டமொன்றில் பாரியளவில் பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரத் குமாரவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவிற்கு அமைய காவல்துறையினர் நேற்றைய தினம் சரத் குமாரவின் வீடு மற்றும் ஏனைய அவர் செல்லக்கூடிய இடங்களை சோதனையிட்டுள்ள போதிலும் அந்த எந்தவொரு இடத்திலும் சரத் குமார இருக்கவில்லை என காவல்துறை தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத் குமார நாட்டை விட்டு தப்பிச் செல்வதனை தடுக்க நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இது கட்டுநாயக்க விமான நிலைய நிர்வாகிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சர் கைது செய்யப்பட உள்ளார்
Dec 16, 2016 @ 06:24
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குணரட்ன கைது செய்யப்பட உள்ளார். நீர்கொழும்பில் அபிவிருத்தித் திட்டமொன்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சரத் குணரட்ன சுமார் 300 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நேற்றைய தினம் சரத் குணரட்னவை குற்றப் புலனாய்வு பிரிவினர் அழைத்த போதிலும், அவர் விசாரணைகளுக்கு சென்றிருக்கவில்லை. பாரியளவிலான நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.