குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தெரிவாகியுள்ள அன்ரொனியோ குற்றரெஸ் (António Guterres) இன் பதவிக்காலம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பாகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்கம் மற்றும் சமாதானம் நோக்கிய இலங்கையின் பணத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோலி (Una McCauley ) தெரிவித்துள்ளார்.
இந்த புத்தாண்டிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.