168
அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு தலைமையிலான 33 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததையடுத்து அங்கு பாஜக ஆட்சி அமைந்துள்ளது.
கட்சி விரோத செயலில் ஈடுபடுவதாகக் தெரிவித்து அருணாச்சல முதலமைச்சர் பேமா காண்டு, துணை முதலமைச்சர் சவுணா மேயின் மற்றும் 5 சட்டமன்ற உறுப்பினர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அருணாச்சல் மக்கள் கட்சி தற்காலிகமாக நீக்கியது.
இந்நிலையில், பேமா காண்டு உட்பட 33 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததையடுத்து அங்கு பாஜக ஆட்சி அமைந்துள்ளது.
Spread the love