288
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரின் மகனான அபிஸ் ரிஸ்வி மற்றும் குஷி ஷா என்ற பெண்ணும் இதில் பலியாகியுள்ளனர் எனவும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கையகம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் 16 வெளிநாட்டினர் உள்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love