எல்லையில் அமைதியை நிலை நிறுத்த வேண்டியதே ராணுவத்தின் பணியாக இருக்கும் அதேவேளை தேவைப்பட்டால் ராணுவம் தனது பலத்தை வெளிப்படுத்தவும் தயங்காது என, இந்தியாவின் 27-வது ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமது நாட்டு எல்லைகளில் பாதுகாப்பு மற்றும் புனிதத் தன் மையை நிலை நிறுத்துவதே ராணுவத்தின் குறிக்கோள் எனவும் உள்நாட்டு சட்டம் ஒழுங்கு நிலவரத்தை உறுதி செய்ய அவசியப்படும்போது, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பதும் தமது கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதி மற்றும் சமாதானத்தையே தமது நாடும், ராணுவமும் விரும்புகிறது எனவும் அதனால் நாம் பலவீனமானவர்கள் என்பது அர்த்தமல்ல எனவும் தெரிவித்துள்ள அவர் தமது ராணுவ பலத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்காக தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.