குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காம்பியாவில் பிரபல வானொலிச் சேவை ஒன்று முடக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நாட்டில் ஆட்சி நடத்தி வரும் ஆட்சியாளர் Yahya Jammeh வை விமர்சனம் செய்த காரணத்திற்காக குறித்த வானொலிச் சேவை மூடப்பட்டுள்ளது. Teranga என்ற வானொலிச் சேவையே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக ஒன்றியத்தின் தலைவர் Emil Touray தெரிவித்துள்ளார். 1994ம் ஆண்டு முதல் Yahya Jammeh ஆட்சி நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வானொலிச் சேவை மூடப்பட்டமைக்கான காரணங்கள் எதனையும் வெளியிடவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. எனினும், தேர்தல்கள் சுயாதீனமானதும் நீதியானதுமாக நடைபெற்றது என அரசாங்கம் அறிவித்துள்ளது.