Home இலங்கை பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு 107 மில்லியன் ரூபா நிதி:

பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு 107 மில்லியன் ரூபா நிதி:

by admin

சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தினால் மட்டும் முடியாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கு பௌத்த  தத்துவம் பெரும் பலமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். குறைந்த வசதிகளையுடைய விகாரைகளின் அபிவிருத்திக்கு பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ் 107 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் மூன்று தசாப்தகால யுத்தத்தின் காரணமாக அழிவடைந்துள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முப்படையினரின் பங்களிப்புடன் ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பௌத்த விகாரைகள் உள்ளிட்ட தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன் ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More